கோவிலில் உண்டியலை பெயர்த்து எடுத்த கொள்ளையர்கள்

மணவாளக்குறிச்சி அருகே கோவிலில் உண்டியலை பெயர்த்து எடுத்த கொள்ளையர்கள் திறக்க முடியாததால் வீசி சென்றனர்.

Update: 2023-09-26 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே கோவிலில் உண்டியலை பெயர்த்து எடுத்த கொள்ளையர்கள் திறக்க முடியாததால் வீசி சென்றனர்.

கோவிலில் கொள்ளை முயற்சி

மணவாளக்குறிச்சி அருகே சிவந்த மண் கல்லடிவிளையில் ஆற்றுமாடன் தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக சமுத்திர பாண்டியன் உள்ளார்.

இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு கோவில் பூஜையை முடித்துவிட்டு பூசாரி சமுத்திர பாண்டியன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். அன்று இரவு கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

உண்டியலை வீசி சென்றனர்

அப்போது அவர்கள் அங்கிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் உண்டியலை திறக்க முடியாததால் அவர்கள் கோவில் மூலையில் உண்டியலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து கோவில் நிர்வாகி ராஜகுமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்