சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் முரசு கொட்டி ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-08 18:51 GMT

41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்த வாக்குறுதிப்படி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சாலைப்பணியாளர் பணியிடத்தை திறன்மிகு இல்லா பணியாளர் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்கிட வேண்டும். காலியாக உள்ள 8 ஆயிரம் சாலைப்பணியாளர் பணியிடத்தை நிரப்பிட வேண்டும். சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கிட வேண்டும். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள மாநில சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் முறையிலும் திட்டத்தின் மூலம் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கரூர் செல்லாண்டிப்பாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரெங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்