மழை வெள்ளத்தில் பள்ளிக்கு செல்லும் பாதை அடித்து செல்லப்பட்டது
நாட்டறம்பள்ளி அருகே பள்ளிக்கு செல்லும் பாதை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளி அருகே பள்ளிக்கு செல்லும் பாதை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதை அடித்து செல்லப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அக்ராவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் பாறையூர் மற்றும் அக்ராவரம் பகுதிக்கு செல்லும் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நேற்்று காலை அந்த வழியாக மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
அப்போது பாதை துணடிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் அதை கடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பள்ளிக்கு செல்ல முடியாததால், பாதாயை உடனடியாக சீரமைக்கக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அக்ராவரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன், புதுப்பேட்டை கூட்டுறவு சங்க துணை தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு அக்ராவரம் அருகே பட்டாடு வட்டப் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள 2 வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சென்று அங்கு வசித்த இரண்டு குடும்பங்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.