கரும்பு நடவு பணி தடுத்து நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை
கரும்பு நடவு பணி தடுத்து நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அரக்கோணம்
கரும்பு நடவு பணி தடுத்து நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் அரசு புஞ்சை நிலத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டு உத்தரவை மீறி கரும்பு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கரும்பு நடும் பணியை தடுத்து நிறுத்தினர்.
மேலும், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.