ரெட்டிமாங்குடி-தச்சங்குறிச்சி தார் சாலை சீரமைக்கப்படாத அவலம்

வனத்துறை அனுமதி வழங்காததால் ரெட்டி மாங்குடி- தச்சங்குறிச்சி தார் சாலை 35 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-10-25 19:41 GMT

வனத்துறை அனுமதி வழங்காததால் ரெட்டி மாங்குடி- தச்சங்குறிச்சி தார் சாலை 35 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ரெட்டிமாங்குடி கிராமம்

லால்குடி தாலுகா புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்டது ரெட்டிமாங்குடி கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காகவும் லால்குடி செல்ல வேண்டும். இவர்கள் லால்குடிக்கு தச்சங்குறிச்சி சாலை வழியாக வரவேண்டும்.

இந்த நிலையில் ரெட்டி மாங்குடி- தச்சங்குறிச்சி சாலை சீரமைத்து 35 ஆண்டு களாகிறது. ஆனால் அந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரெட்டிமாங்குடி-தச்சங்குறிச்சி இணைப்பு சாலை வனத்துறை வழியாக செல்கிறது.

தேர்தல் புறக்கணிப்பு

இதைசீரமைக்க வனத்துறை அனுமதிகிடைக்கவில்லை. இதன்காரணமாக தான் சீரமைக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ரெட்டிமாங்குடி-தச்சங்குறிச்சி தார் சாலையை நெடுஞ்சாலை துறை அல்லது வனத்துறை மூலம் சீரமைக்காவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்