ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரைக்கு 6¾ மணி நேரம் தாமதமாக வந்தது

ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரைக்கு 6¾ மணி நேரம் தாமதமாக வந்தது

Update: 2022-11-04 18:49 GMT

ராமேசுவரத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் கட்டுமான மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்து இயக்கப்படும் ரெயில்கள் மதுரை பணிமனைக்கு பராமரிப்புக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால், அந்த ரெயில்கள் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று மாலை 4.20 மணிக்கு பதிலாக சுமார் 6¾ மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி புறப்பட்டது. இதனால், இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு இரவு 7.20 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தது. இதனால், இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலும் திருப்பதிக்கு தரிசனத்துக்காக செல்லும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இந்த ரெயிலில் பயணம் செய்கின்றனர். இந்த காலதாமதத்தால் அவர்களுக்கு திருப்பதி தரிசன முன்பதிவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்