கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-11-23 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, பாரூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்றும் கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது. இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்