சுற்றித்திரிந்தவர்களை மீட்ட ரெயில்வே போலீசார்
நாகை ரெயில் நிலையத்தில் ஆதரவு இன்றி சுற்றித்திரிந்தவர்களை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
நாகை சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். இதனால் நாகை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நாகை ரெயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் யாசகம் பெற்று வருகின்றனர். இவர்களால் ெரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படுகிறது. இந்த நிலையில் நாகை ெரயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிபவர்களுக்கு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களை மீட்கும் பணிகளில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டனர்.அதன்படி நாகை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரைட் (வயது 48), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (55), தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் (58) ஆகிய 3 பேரை ரெயில்வே போலீசார் மீட்டு, நாகை நகராட்சிக்குட்பட்ட வீடற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.