சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு மிரட்டல் விடுத்த ரவுடிகள்

கோவையில் சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு மிரட்டல் விடுத்தபடி அடுத்தடுத்து கொலகளை செய்துள்ளனர். மிரட்டல் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Update: 2023-02-16 18:45 GMT

கோவையில் சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு மிரட்டல் விடுத்தபடி அடுத்தடுத்து கொலகளை செய்துள்ளனர். மிரட்டல் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

கோர்ட்டு அருகே கொலை

கோவையை அடுத்த கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்த வர் கோகுல் (வயது 23), இவர் மீது 20-க்கும் மேலான குற்ற வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 13-ந்தேதி கோவை கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு நண்பர் மனோஜுடன் டீக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவரை, மற்றொரு ரவுடிகும்பல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

கோகுல் கொலையில் தொடர்புடைய ஆசாமிகள் நீலகிரி மாவட் டம் கோத்தகிரியில் வாகன சோதனையின்போது போலீசில் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), டேனியல் (27), ரத்தினபுரியை சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத் தை சேர்ந்த ஹரி என்ற கவுதம் (24), பீளமேட்டை சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரியை சேர்ந்த அருண்சங்கர் (21), சூர்யா (23) என்பது தெரியவந்தது.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

அவர்களை போலீசார் கைது செய்து காரில் கோவைக்கு கொண்டு வந்தனர். வழியில் எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோர் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

போலீசார் சுட்டதில் அவர்கள் 2 பேரின் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழிக்கு பழியாக கொலை

கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மற்றொரு ரவுடியான கோகுல் கைதாகி சிறைக்கு சென்றார். இதனால் குரங்கு ஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை பழிதீர்க்க 2 ஆண்டுக ளாக காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் கோகுல் ஜாமீனில் வெளியே வந்து கோர்ட்டுக்கு வருவதை குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கண்காணித் தனர். இதில் அவர், பாதுகாப்புக்கு ஆட்கள் யாருமின்றி வருவதை அறிந்த அவர்கள் திட்டமிட்டு கடந்த 13-ந் தேதி கோகுலை வெட்டிக் கொன்றனர். கட்டப்பஞ்சாயத்து, அடி-தடி போன்ற செயல்களில் ஈடுபடும்போது இவர்கள் 2 தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டுள்ளனர்.

சமூக வலைதளத்தில் மோதல்

இதுதவிர சமூக வலைதளங்களிலும் அடிக்கடி வீடியோ வெளி யிட்டு மோதிக் கொண்ட விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளது. குரங்கு ஸ்ரீராம் கொலையில் தொடங்கி கோகுல் கொலை வரை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் மூலம் மோதிக்கொண்டுள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட குரங்குஸ்ரீராம், உன் ஏரியாவுக்குள் வருகிறேன், முடிந்தால் என்னை போட்டு பார் என இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு கோகுலுக்கு அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து ஆத்திரம் அடைந்த கோகுல் கோஷ்டியினர் குரங்குஸ்ரீராமை வெட்டிக் கொலை செய்தனர்.

இதனால் குரங்கு ஸ்ரீராமின் கோஷ்டியினர் கோகுல் மீது ஆத்திரம் அடைந்தனர். மேலும் அவரை பழிவாங்கும் நோக்கில் பல வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

ஆயுதங்களுடன் வீடியோ

அதில் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி, வாள் போன்ற ஆயுதங் களை ஏந்தி நடந்து வந்து மிரட்டுவது போன்ற பல வீடியோக்க ளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த காட்சிகளின் பின்னணி யில் சினிமா பாடல்களையும், உணர்ச்சிகரமான வசனங்களையும் இணைத்து ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் பிளட்ஸ் மற்றும் ரத்தினபுரி போன்ற முகவரியில் இன்ஸ்ட்ராகிராமில் வெறுப்பை தூண்டும் வகையில் பலருக்கும் பரப்பி உள்ளனர்.

அதோடு ஸ்ரீராம் இறப்பிற்கு விரைவில் பழிதீர்க்கப்படும் என்று அடிக்கடி இன்ஸ்ட்ராகிராமில் ஸ்டோரிகளும் வைத்து உள்ளனர்.

இது போல் பிரகா பிரதர்ஸ் என்ற பெயரில் ஒரு ரவுடி கோஷ்டி யினர் தங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் அனைவரும் நெஞ்சில் பச்சை குத்தி உள்ளனர்.

பெண்ணுடன் வரும் ரவுடிகள்

இவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் உச்சக்கட்டமாக ஒரு பெண்ணையும் பயன்படுத்தி உள்ளனர். அதில் ஒரு பெண்ணின் கையில் கட்டையுடன் நடந்து வருகிறார். அவரை பின் தொடர்ந்து 4 பேர் ரவுடிகள் போலவும் சினிமா பாடல்களை ஒலிக்க விட்டபடி வரும் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

கானா பாடல்களை ஒலிக்க விட்டு சினிமா ஹீரோ, வில்லன்களை மிஞ்சும் வகையில் அதிரடியான பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் ரவுடி கும்பல் வெளியிட்டு உள்ளனர்.

கோகுல் ஒரு பெண்ணை காதலித்து வந்து உள்ளார். அவர், அந்த பெண்ணை காதலர் தினத்தன்று திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார்.

இந்த காதல் விவகாரம் குறித்தும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு கருத்துகளை இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவிட்டு உள்ளனர்.

இதுவும் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகத் தான் காதலர் தினத்துக்கு முந்தைய தினம் கோகுல் தீர்த்து கட்டப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் விசாரணை

எதிர்தரப்பு கோஷ்டியை பழிவாங்குவதை தெரிவிக்கும் வகை யில் 50-க்கும் மேற்பட்ட வீடியோக்களை ரவுடிகள் வெளியிட்டு உள்ளனர். அவற்றை தற்போது போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்த வீடியோக்களில் வலம் வருபவர்கள் யார்?. யார்?. வீடியோ எடுத்தவர்கள் யார்?, அதை எடிட்டிங் செய்தவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் நேரடியாக விசாரித்து வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவது ஏன்?

ரவுடிகும்பலை சேர்ந்தவர்கள் தங்களின் மிரட்டல் வீடியோக்க ளை வெளியிட இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

அதில் ஒருவருக்கொருவர் உரையாடினால் பதிவு செய்ய முடியாது. மேலும் அந்த வீடியோக் களை காப்பி செய்வதிலும் சிரமம் உள்ளது.

எனவே குற்றச்செயல் களில் ஈடுபடும் நபர்கள், தங்களது வன்மத்தை எளிதாக வெளிப்ப டுத்தும் வகையில் வீடியோ வெளியிடுகின்றனர்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது,

சமூக வலைத்தளங்களில் மிரட்டும் வகையில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கைதானவர்கள் மற்றும் சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும்.

ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிடும் அனைத்து ரவுடிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்