சுசீந்திரம்,
பறக்கையில் மலைப்பாம்பு பிடிபட்டது.
பிடிபட்டது
பறக்கை நெடுந்தெருவில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். அது சுமார் 12 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.