மலைப்பாம்பு பிடிபட்டது

கொல்லிமலை அடிவாரத்தில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-10-03 18:55 GMT

சேந்தமங்கலம்

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புதுக்கோம்பையை சேர்ந்தவர் கோட்டை பழனிசாமி. இவர் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவ்வழியே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்தது. அப்போது மலைப்பாம்பு ஒரு கோழியை விழுங்கிய நிலையில் காணப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நாமக்கல் வனச்சரகர் பெருமாள் உத்தரவின் பேரில் வன காவலர் பாலச்சந்திரன், காரவள்ளி வனத்துறை சோதனை சாவடி உதவியாளர் திருப்பதி மற்றும் சிலர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பிடித்து கொல்லிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்