ஆடு திருடிய வாலிபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

சீர்காழியில் ஆடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-06-12 16:34 GMT

சீர்காழி

சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம், பாதரக்குடி, சீர்காழி புறவழிச்சாலை, கோவில்பத்து, ெரயில்வே ரோடு, காமராஜபுரம், தென்பாதி, சட்டநாதபுரம், அகனி, தில்லைவிடங்கன் உள்ளிட்ட பகுதிகளில் பலர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போதும், சாலையோரம் படுத்து தூங்கும்போதும் வாகனங்களில் வரும் சில மர்ம நபர்கள் அந்த ஆடுகளை திருடிக் கொண்டு வேகமாக சென்று விடுகின்றனர். இதுகுறித்து, ஆடுவளர்ப்போர் சீர்காழி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

மடக்கி பிடித்த மக்கள்

இந்தநிலையில் சீர்காழி அருகே காமராஜபுரம் தாடாளன் கோவில் பகுதியை சேர்ந்த ரோஜாகனி என்பவருக்கு சொந்தமான ஆடுகளை இரவில் வாலிபர் ஒருவர் திருடிச் செல்வதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் சீர்காழி சேந்தங்குடி கன்னிகோவில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும், அவர் சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






Tags:    

மேலும் செய்திகள்