ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைைமயில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கருங்கல் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-08-19 18:45 GMT

கருங்கல், 

கருங்கல் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

செல்போன் கோபுரம்

கருங்கல் அருகே உள்ள மிடாலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கைளை தனியார் நிறுவனம் தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில வாரங்களாக பணி கைவிடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் ெகாடுத்தனர்.

பணி தடுத்து நிறுத்தம்

தொடர்ந்து எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறும்போது, 'குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பணியை கைவிட வேண்டும். இல்லையெனில் பொதுமக்களுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயராணி, கருங்கல் பேரூராட்சி கவுன்சிலர்கள் வினோ மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்