கலெக்டரின் காரை நிறுத்தி முறையிட்ட பொதுமக்கள்

பேரணாம்பட்டு அருகே கலெக்டரின் காரை நிறுத்தி பொதுமக்கள் முறையிட்டனர்.

Update: 2023-10-02 17:37 GMT

பேரணாம்பட்டு ஒன்றியம் சாத்கர் ஊராட்சி கொண்டம் பல்லி கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூட்டம் முடிந்ததும் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். கமலாபுரம் கிராமம் அருகே பேரணாம்பட்டு-குடியாத்தம் சாலையில் வந்தபோது கமலாபுரம் கிராமம் மற்றும், கோபால் மந்திரிப்பட்டி பாறை மேல் பகுதியில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரின் காரை நிறுத்தினர்.

உடனே கலெக்டர் காரிலிருந்து இறங்கினார். அவரிடம் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். இதனையடுத்து கலெக்டர் ஏரிக்கால்வாய் செல்லும் கானாற்று பகுதியை சென்று பார்வையிட்டார். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்மாறு குடியாத்தம் சப்- கலெக்டர் வெங்கட்ராமனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்