பட்டப்பகலில் திருடிய வாலிபரை பிடித்து மரத்தில் கட்டிவைத்த பொதுமக்கள்

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து, தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2023-05-23 18:59 GMT

பட்டப்பகலில் திருட்டு

நாட்டறம்பள்ளியை அடுத்த கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் தனம்மாள் (வயது 60). இவர் தனியாக வசிப்பதை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நேற்று வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.

இந்த நிலையில் தனம்மாளின் மருமகள் தர்ஷினி அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வருகையில் மர்ம நபர்கள் இருவர் வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்து கத்தி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

மரத்தில் கட்டிப்போட்டனர்

அப்போது ஒருவன் தப்பித்து ஓடிய நிலையில், மற்றொருவனை அப்பகுதி மக்கள் பிடித்து வீட்டின் அருகில் உள்ள மரத்தில் கட்டி போட்டு, தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தில் கட்டி வைத்து இருந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது 22) என்பது தெரிய வந்தது. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பட்டப்பகலில் திருட்டு

நாட்டறம்பள்ளியை அடுத்த கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் தனம்மாள் (வயது 60). இவர் தனியாக வசிப்பதை அறிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நேற்று வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.

இந்த நிலையில் தனம்மாளின் மருமகள் தர்ஷினி அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வருகையில் மர்ம நபர்கள் இருவர் வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்து கத்தி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

மரத்தில் கட்டிப்போட்டனர்

அப்போது ஒருவன் தப்பித்து ஓடிய நிலையில், மற்றொருவனை அப்பகுதி மக்கள் பிடித்து வீட்டின் அருகில் உள்ள மரத்தில் கட்டி போட்டு, தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தில் கட்டி வைத்து இருந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது 22) என்பது தெரிய வந்தது. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்