அதிகாரிகளை, பொதுமக்கள் தேசியகொடியுடன் முற்றுகையிட்டு போராட்டம்

அதிகாரிகளை, பொதுமக்கள் தேசியகொடியுடன் முற்றுகையிட்டு போராட்டம்

Update: 2022-08-13 18:20 GMT

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தேசிய கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

திருவாரூர் பழைய தஞ்சை சாலை அருகில் வாய்க்கால் புறம்போக்கில் உள்ள 6 வீடுகள் மற்றும் 3 கடைகளை இடித்து அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏற்கனவே இந்த இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அங்கு வசிக்கும் குடியிருப்பு மக்களின் எதிர்ப்பு காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் போனது. இதையடுத்து ஐகோர்ட்டு நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் திருவாரூர் தாசில்தார் நக்கீரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறிளாளர் கோவிந்தராஜன் உரிய போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த அந்த பகுதி குடியிருப்பு மக்கள் மற்றும் பெண்கள் தேசிய கொடியுடன் அதிகாரிகளை உள்ளே விடாமல் வழியை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு பணிகள் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு மக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் குடியிருப்பு மக்கள் இடத்தை காலிசெய்ய காலஅவகாசம் கேட்டனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் காலஅவகாசம் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்