குளத்தில் மணல் எடுக்க வந்த வாகனத்தை மறித்து போராட்டம்

மயிலாடுதுறை அருகே குளத்தில் மணல் எடுக்க வந்த வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-06-12 18:45 GMT

மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார்கோவில் குளத்தில் நேற்று மதியம் பொக்லின் எந்திரம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது குளத்தை தூர்வாரபோகிறீர்களா? என்று பொதுமக்கள் கேட்டபோது குளத்தில் இருந்து மணலை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து அய்யனார்கோவில் குளத்தில் இருந்து ஊராட்சியில் அனுமதிபெறாமல் எப்படி மணல் எடுக்கலாம்? என்று கூறி அதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்