வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்

Update: 2022-09-19 18:45 GMT

விழுப்புரம்

பாராட்டு சான்றிதழ்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி படிவம்-6 பி மூலம் வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்து சிறப்பாக பணியாற்றிய 7 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைப்பு பதிவு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இப்பணியானது 1.8.2022 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

ஆதார் எண் இணைப்பு பணி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிக்காக மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம்-6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இப்பணியில் 100 சதவீத இலக்கினை விரைந்து எய்திட வேண்டி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை இணைத்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தாசில்தார் உஷா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்