மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை

மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை

Update: 2023-02-08 20:16 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் வலியவிளையை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மனைவி அமர்தபாய் (வயது 82). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

செல்லையா கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் அமர்தபாய் குலசேகரம் அருகில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் முதுமை, நோய் காரணமாக அமர்தபாய் இறந்து விட்டார்.

நேற்று காலை 10 மணிக்கு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தது. குமாரபுரம் வலியவிளையில் உள்ள வீட்டின் அருகில் கணவர் செல்லையாவை அடக்கம் செய்த இடத்தின் அருகே அமர்தபாயையும் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதாவது குறிப்பிட்ட இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கொற்றிக்கோடு சப் -இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

பின்னர் மாலையில் வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் கல்குளம் தாலுகா நில அளவையர் மூலம் பிரச்சினைக்குரிய இடத்தை அளவு செய்தனர். இதில் குறிப்பிட்ட நிலம் செல்லையா குடும்பத்திருக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நிலத்தின் அருகே உள்ள மற்றொரு இடத்தில் அமர்தபாயின் உடலை அடக்கம் செய்தனர்.

இதனால் அங்கு சுமார் 14 மணி நேரம் பரபரப்பாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்