தப்பி ஓட முயன்ற கைதி சிக்கினார்

சங்கரன்கோவிலில் தப்பி ஓட முயன்ற கைதி போலீசில் சிக்கினார்

Update: 2023-01-13 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த பொன்னுசாமி பாண்டியன் மகன் கார்த்திக். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் வெளியே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் ஜோதி மாரியப்பனை (வயது 22) கைது செய்தனர்.

பின்னர் அவரை சங்கரன்கோவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அங்குள்ள வளாகத்தில் காத்திருந்தனர். அப்போது அவர் அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்து விட்டு தப்பித்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோர்ட்டு காவலர்கள் மற்றும் போலீசார், ஜோதி மாரியப்பனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சிறையில் அடைக்க காரில் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்