சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.104 குறைந்து விற்பனையாகிறது.

Update: 2022-11-12 06:16 GMT

சென்னை,

தங்கம் விலை கடந்தசில நாட்களாக அதிகரித்து வந்தது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.39 ஆயிரத்துக்கு 240-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.104 குறைந்து ரூ.39 ஆயிரத்து 136-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 892 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்