சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை, தற்போது 2வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

Update: 2023-02-04 05:02 GMT

சென்னை,

மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வெள்ளிக்கட்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன் தங்க நகைகள் இறக்குமதி வரியும் அதிரடியாக கூட்டப்பட்டது.

பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியது. இதன் காரணமாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,520 விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.76.40க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 42,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 80 குறைந்து 5335க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்