முகூர்த்த நாட்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைவு

சுப முகூர்த்தம் இல்லாததால் மல்லிகைப்பூவின் விலை குறைந்து காணப்படுகிறது. கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.

Update: 2023-07-26 19:56 GMT

தாயில்பட்டி, 

சுப முகூர்த்தம் இல்லாததால் மல்லிகைப்பூவின் விலை குறைந்து காணப்படுகிறது. கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.

மல்லிகைப்பூ சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் கணஞ்சாம்பட்டி, சிப்பிப்பாறை, புல்லக்கவுண்டன்பட்டி, கொம்மங்கிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் வரை மல்லிகைப்பூவுக்கு அதிக கிராக்கி இருந்தது. இதனால் மல்லிகைப்பூ கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது விலை மிகவும் குறைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கிலோ ரூ.300

இதுகுறித்து கணஞ்சாம்பட்டி விவசாயி ராஜா கூறியதாவது:-

வெம்பக்கோட்டை பகுதியில் பரவலாக மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதங்களில் முகூர்த்த நாட்கள், சுப காரியங்கள் அதிகம் இருந்ததால் கிலோ ரூ.500 வரை மல்லிகைக்கு விலை கிடைத்தது.

ஆனால் தற்போது ஆடி மாதம் என்பதால் சுப காரியங்கள் மற்றும் முகூர்த்தம் எதுவும் இல்லை. ஆதலால் மல்லிகைப்பூவின் விலை பாதியாக குறைந்தது. ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது. இங்கு விளையக்கூடிய பூக்களை சிவகாசியில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். விலை மிகவும் குறைவால் தொழிலாளர்கள் சம்பளத்துக்கு கூட கொடுக்க முடியாத நிைல உள்ளது.

விவசாயிகள் நஷ்டம்

போதிய அளவு லாபம் இல்லாததால் பூக்கள் பறிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வீட்டில் உள்ள அனைவரையும் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

விலை குறைவு வருகின்றன சில சமயங்களில் பறிக்காமல் அப்படியே செடியில் விட்டு விடுகிறோம். இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்