தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து 5 ஆயிரத்து 275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.