பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லையில் பூக்கள் விலை உயர்வு

பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்தது.

Update: 2023-04-04 19:27 GMT

பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்தது.

பூ மார்க்கெட்

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு தினமும் வருகிறது. இங்கிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்வார்கள். வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

விலை உயர்வு

நேற்று முன்தினம் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.300 அதிகரித்து ரூ.800-க்கு விற்கப்பட்டது. அதேபோல் அரளிப்பூ ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், வாடாமல்லி ரூ.200-க்கும் விற்பனையானது. எனினும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

நெல்லை, பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட இடங்களில் பூமாலைகள் கட்டி விற்பனை செய்யப்பட்டன இந்த மாலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பூ மாலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

சாஸ்தா கோவிலுக்கு செல்கிறவர்கள் மாலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். காவல் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காக அரளி மாலை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்