மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது

வால்பாறை டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது.

Update: 2022-06-18 16:05 GMT

வால்பாறை

வால்பாறை டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை போன்ற மலைப்பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்செல்லும் மதுப்பிரியர்கள் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்செல்லும் மதுப்பிரியர்கள், அதை பயன்படுத்திவிட்டு காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

மதுபாட்டில்களில் 'ஸ்டிக்கர்'

அதாவது விற்பனை செய்யும்போது ஒரு மதுபாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும். அதை பயன்படுத்திவிட்டு காலி மதுபாட்டிலை மீண்டும் டாஸ்மாக் கடையில் கொடுத்து, ரூ.10 பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் மதுபாட்டில்களை பொது இடங்களில் தூக்கி வீசுவது தடுக்கப்படும். அதன்படி வால்பாறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை அமலுக்கு வந்து உள்ளது. மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களில் கூடுதலாக ரூ.10 வசூலிப்பது தொடர்பான ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்