குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-10 17:05 GMT

சோளிங்கர்-அரக்கோணம் மார்க்கத்தில் சாலை கிராமம் உள்ளது. அங்கிருந்து குருவராஜப்பேட்டை ரோட்டில் இருந்து சித்தாம்பாடி செல்லும் பிரதான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வயல்களுக்கு உரம், பூச்சி கொல்லி மருந்துகளை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்