ஓடும் ெரயிலில் இருந்து பெண் பயணி கீழே தவறவிட்ட செல்போனை போலீசார் மீட்டு ஒப்படைப்பு

ஓடும் ெரயிலில் இருந்து பெண் பயணி கீழே தவறவிட்ட செல்போனை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

Update: 2023-02-04 18:49 GMT

ஓடும் ெரயிலில் இருந்து பெண் பயணி கீழே தவறவிட்ட செல்போனை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

ஈரோடு அளுக்குழி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்கள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரெயில் திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது மோகனபிரியா, கையில் வைத்திருந்த செல்போன் ஜன்னல் வழியாக தவறி தண்டவாளப்பகுதியில் விழுந்து விட்டது. ரெயில் ஜோலார்பேட்டையை சென்றடைந்ததும் இறங்கிய மோகனபிரியா அது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாள பகுதியில் கிடந்த செல்போனை மீட்டு கொண்டு வந்தனர்.

பின்னர் மோகனப்பிரியாவை வரவழைத்து செல்போனை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்