திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
திருச்சி,
திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகே காவலர் சிற்றரசை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடிகளான துரைசாமி மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான துரைசாமி மற்றும் சோமசுந்தரம் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ரவுடிகள் மீதும் துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் துரைசாமி, சோமசுந்தரம் இருவருக்கும் கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.