தொழில் அதிபர் மகனின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை

The police interrogated tதொழில் அதிபர் மகனின் உதவியாளரிடம் போலீசார் விசாரணைhe assistant of the businessman's son

Update: 2022-07-09 13:02 GMT

கோவை, ஜூலை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொழில் அதிபர் மகனின் உதவியாளரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

கொலை, கொள்ளை வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

உதவியாளரிடம் விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அவருடைய மகனான செந்தில்குமாரிடம் கடந்த 7-ந் தேதி கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக செந்தில்குமாரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் செந்தில்குமாரின் தந்தையான, மணல் ஒப்பந்ததாரரும், தொழில் அதிபருமான ஆறுமுகசாமியிடமும் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் செந்தில் குமாரின் உதவியாளரான பழனிச்சாமி என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் பழனிச்சாமி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தும் மையத்துக்கு வந்தார்.அவரிடம் மாலை வரை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

----

Tags:    

மேலும் செய்திகள்