திற்பரப்பு மகாதேவர் கோவிலில் கிழக்கு வாசல் திறப்பு

திற்பரப்பு மகாதேவர் கோவிலில் கிழக்கு வாசல் திறப்பு

Update: 2022-11-21 18:45 GMT

திருவட்டார், 

திற்பரப்பு அருவியின் அருகே மகாதேவர் கோவில் உள்ளது. இங்கு மூலவர் லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் 12 சிவாலங்களில் 3-வது சிவாலயமாக உள்ளது. இந்த கோவிலில் 5 வாசல்கள் உள்ளன. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மேற்கு மற்றும் வடக்கு வாசல் மட்டுமே திறந்திருக்கும். திற்பரப்பு பிரதான சாலையையொட்டி உள்ள கிழக்கு வாசல் திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால், பக்தர்கள் சுற்றி வந்து மேற்கு மற்றும் வடக்கு வாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

எனவே, கிழக்கு வாசலை திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அறநிலையத்துறையினர் கிழக்கு வாசலை பக்தர்கள் வசதிக்காக திறந்து வைத்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது காலை பூஜை நேரத்தில் மட்டுமே கிழக்கு வாசல் திறக்கப்படுகிறது. போதிய ஊழியர்களை நியமித்து காலை, மாலை இருநேரமும் கிழக்கு வாசல் திறக்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திற்பரப்பு சந்திப்பு பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் தற்போது வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்