கலெக்டரிடம் முறையிட தோட்ட தொழிலாளர்கள் முடிவு

பண பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரை சந்தித்து முறையிட கூடலூர் தனியார் தோட்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-04-24 18:45 GMT

கூடலூர், 

பண பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரை சந்தித்து முறையிட கூடலூர் தனியார் தோட்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பண பலன்களை வழங்க கோரிக்கை

கூடலூர் சில்வர் கிளவுட் தோட்ட தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் போஜராஜ், மாவட்ட செயலாளர் முகமது கனி, பொருளாளர் ராஜூ மற்றும் தோட்ட கமிட்டி நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் தொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரி நீலகிரி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையீடுவது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

திரும்ப பெற வேண்டும்

பின்னர் மத்திய அரசின் நிர்பந்தப்படி மாநில அரசு சட்டமன்றத்தில் இயற்றிய 8 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் மே மாதம் 12-ந் தேதி நடைபெறும் அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறும்போது, சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவது என்றும், அப்போதும் தீர்வு காணப்பட வில்லை எனில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்