மருந்தாளுனர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

Update: 2023-08-16 18:29 GMT

பணியிடங்களை நிரப்பிட வேண்டும்

1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை எம்ஆர்பி வழியாக நிரப்பிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் உள்ள 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை உடனடியாக பணிவரன்முறை செய்திட வேண்டும்.

46 துணை இயக்குனர் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர், மருந்தியல் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.

கோரிக்கை அட்டை அணிந்து...

மருந்துகளை உரிய வெப்பநிலையில் பராமரித்திட குளிர்பதன வசதியுடன் மருந்து கிடங்குகளை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்