மீன் பிடிக்க ஏரிக்கு சென்றவர் சேற்றில் சிக்கி பலி

மீன் பிடிக்க ஏரிக்கு சென்றவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

Update: 2023-05-08 19:14 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 40). விவசாயி. இவர் நேற்று தழுதாழையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஏரியில் இறங்கி மீனுக்காக வலை விரித்தபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்டார். பின்னர் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்