சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் ஆலாவூரணி பகுதியில் உள்ள பாண்டி கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆலாவூரணியை சேர்ந்த செல்வராஜ் மகன் வேல்சாமி (வயது 26) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து விசாரணை நடத்திய போது வேல்சாமி 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.