நகர மன்ற துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததால் நகர மன்ற துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-25 15:20 GMT

குடியாத்தம் நகராட்சிக்கு போடிப்பேட்டை பகுதியில் உள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றிலிருந்து பம்பிங் ஸ்டேஷன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே

குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகிலேயே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக குடியாத்தம் நகர் மன்றத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி (அ.தி.மு.க) புகார் தெரிவித்திருந்தார், அதேபோல் 23-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஆட்டோமோகன் என்பவரும் மணல் கொள்ளை குறித்து புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தியின் கணவரான 24-வது வட்ட அ.தி.மு.க.செயலாளர் மூர்த்தியை போடிப்பேட்டை பசவேஸ்வரா ரோடு பகுதியை சேர்ந்த கார்மேகம் (56) என்பவர் தொடர்பு கொண்டார். மணல் கொள்ளை குறித்து எப்படி புகார் அளிக்கலாம் என கேட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் நகர மன்ற துணை தலைவரையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகர் மன்ற துணைத் தலைவர் மற்றும் அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கார்மேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்