பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்
கங்கைகொண்டான் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராணி (வயது 33). இவர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்லபாண்டி (33). இவர் செல்வராணியிடம், 'எனது தாயாருக்கு ஏன் தேசிய ஊரக வேலை வழங்கவில்லை?' என்று கூறி அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லபாண்டியை கைது செய்தனர்.