பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-10-26 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் தீபிகா காந்தி. இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திருக்கண்ணங்குடி முதலியார் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 42) என்பவர், கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று எனது மனைவி பெயருக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை. மேலும் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் இருப்பதற்கு நீ தான் காரணம் என மது போதையில் சென்று ஒருமையில் பேசியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தீபிகா காந்தி, கீழ்வேளூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்