செஞ்சி அருகேவிவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

செஞ்சி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-28 18:45 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள சோபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எட்டியான் (வயது 60), விவசாயி. இவருக்கும் அவரது உறவினரான அதேஊரை சேர்ந்த குப்புசாமி மகன் முத்து (40) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று முத்து, எட்டியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்தாராம். இதை பார்த்த எட்டியான் எனது நிலத்தில் எதற்காக பயிர் நட்டாய்? என முத்துவை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்து மற்றும் அவரது மனைவி அஞ்சலை ஆகிய 2 பேரும் சேர்ந்து எட்டியானை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். அஞ்சலையை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்