கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் குமார்(வயது 45). இவருக்கும், அதே பகுதி கரைமேடு வடிவேல் மகன் பாலகிருஷ்ணன்(43) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குமார் செங்குந்தபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலகிருஷ்ணன் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.