சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
சோதனைச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
களியக்காவிளை,
அருமனை அருகே மழுவன்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன். இவர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று குமரி எல்லை பகுதியான தோலடி சோதனைச்சாவடியில் மதுசூதனன் பணியில் இருந்தார். அப்போது செருவல்லூர் தேவிகோடு சாற்றோட்டு பொற்றை வீட்டைச் சேர்ந்த திலீப்குமார் (39) என்பவர் தகராறில் ஈடுபட்டதோடு கத்தியை காட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதுசூதனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மதுசூதனன் பளுகல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப் குமாரை கைது செய்தனர்.