பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருக்கோவிலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் காப்பகத்தில் ஒப்படைப்பு போலீசார் நடவடிக்கை

Update: 2022-12-03 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, கீழத்தாழனூர் மற்றும் பெரியானூர் ஆகிய பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட பெரியானூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் பழனிவேல் என்பவர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளை அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பழனிவேலுவை பிடித்து விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் அன்பு ஜோதி மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். இதற்காக போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்