மடிக்கணினி, பணத்தை திருடியவர் கைது
வீட்டிற்குள் புகுந்து மடிக்கணினி, பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29). இவரது வீட்டிற்குள் நேற்று புகுந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த மடிக்கணினி மற்றும் ஆயிரம் ரூபாயை திருடி விட்டு தப்ப முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து பனையப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மகாதேவ் மண்டல் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மடிக்கணினி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.