திங்கள்சந்தை,
இரணியல் அருகே உள்ள செக்காரவிளையை சேர்ந்தவர் ஜோசப் சுரேஷ் (வயது50), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த சைக்கிள், தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் குழாய் போன்ற பொருட்களை காணவில்லை. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் விசாரணை நடத்தி வீட்டில் இருந்த பொருட்களை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (30) என்பவரை கைது செய்தார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---------