சமூக வலைதளத்தில் திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

சமூக வலைதளத்தில் திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-07-21 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் முருகவேல்(வயது 43). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் வெற்றிவேந்தன் கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகவேலை தேடி வந்தனர். இந்த நிலையில் முருகவேல், கேரளாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்குமார் தலைமையிலான போலீசார் கேரளா சென்று அங்கிருந்த முருகவேலை கைது செய்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்