பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு தோட்டத்தில் விற்பனைக்காக கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சுந்தர்ராஜன் (வயது 50) என்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.