கள் விற்றவர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே வீட்டில் வைத்து கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள் விற்கப்படுவதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, கள் விற்றதாக சிலுவைநாதர் மகன் ஆரோக்கிய ஜேசுராஜா (வயது 34) என்பவரை கைது செய்தனர். அவர் தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளத்தில் இருந்து கள் வாங்கி வந்து, வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.