பாரில் மது விற்றவர் கைது

பாரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-19 19:10 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை பாலம் அருகே அரசு டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை இல்லாத நேரங்களில் தொடர்ந்து மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் அந்த பாரில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஆதி இளங்கோவன்(வயது 53) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 23 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்