மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

Update: 2023-07-20 20:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் நகர கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூரை சேர்ந்த குமார் (வயது 50) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்