பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது
பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது
சோழவந்தான் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர், அந்த பகுதியை சேர்ந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி உள்ளார். இதுகுறித்து அந்த பெண், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, முருகனை கைது செய்தனர். சைபர் குற்றங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், யாரேனும் பாதிக்கப்பட்டால், அது குறித்து அச்சமின்றி, தயக்கம் இன்றி காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் அறிவுறுத்தி இருக்கிறார்.